தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையில் விவாதம். “காதல் நல்லதா கெட்டதா?”
“அந்த காலத்திலே நாங்கள்ளாம் சினிமா பாக்கும் போது இப்படியா இருந்தது, ஹீரோவும் ஹீரோயிணியும் ஒருத்தருக்கொருத்தர் தொட்டுப் பேசக் கூட மாட்டாங்க. ஆனா, இப்பொ பாரு, என்ன கூத்தடிக்கிறாங்கப்பா. ஏன் அந்த காலத்திலே மட்டும் காதலிக்கறாப்போல் படம் எடுக்கலியா? இப்பொத்தானா எடுக்கிறாங்க? நாடு கெட்டுப் போச்சப்பா” என்றார் ஒரு பெரியவர். “அட நீ என்ன தாத்தா? ஸ்கிரீனோட ஒரு மூலையில ஹீரோ, இன்னொரு மூலையில ஹீரோயின் நின்னுக்கிட்டு. காதல் காட்சிக்கு ஒரு மதிப்பே இல்ல, இன்னிக்கு வர படமெல்லாம் பாருங்க, ஒரு நெருக்கமிருக்கு” என்றான் பேரன்.
கேட்டுக் கொண்டே வந்த பக்கத்து வீட்டுக்காரர், “ஆரம்பிச்சிட்டீங்களா உங்க வாக்குவாதத்த, எல்லாம் ஒண்ணு தான், இதுக்கு போய் சண்டை போட்டுக்கிறீங்களே” என்றார். “அப்போ, 'பாலும் கசந்ததடி சகியே, படுக்கை நொந்ததடி' னு பாடினான், இப்போ, 'எடுத்து வச்ச பாலும், விரிச்சு வச்ச பாயும், வீணாகத்தான் போகுது” னு பாடுறான். என்னத்த வித்தியாசத்த கண்டுப்புட்டீங்க? எல்லாம் பாக்கறவன் பகுத்தறிய வேண்டியது தான்” என்றார்.
ஆமாங்க, பாலில் தண்ணீர் கலப்பது என்றாகிவிட்டது, அப்போ பாலை மட்டும் பிரித்துக் குடிக்கும் அன்னப் பறவையா மாறித்தானே ஆகணும்?
உலகத்தமிழன்
Tuesday, April 26, 2005
Subscribe to:
Comments (Atom)