அன்பு குழு நண்பர்களே,
பெண் குழந்தைகள் கொல்லப் படுவதைத் தடுக்க, 1992ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட "அரசுத் தொட்டில்" திட்டம் வந்த போது, மக்களுடைய அறியாமையையும் கொடூரமான போக்கையும் நினைத்தும், அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் குறித்தும் பலர் வருந்தியதுண்டு. குறிப்பாக, இந்திய கலாச்சாரத்தின்படியும், பொதுவாக ஆசிய கலாச்சாரத்தின்படியும் ஆண் வாரிசுக்கு இருக்கும் முக்கியத்துவம், பெண் வாரிசுக்கில்லை என்பதால் இத்தகைய கொடுமைகள் நடந்து வந்திருக்கின்றன. இதை நியாயப் படுத்த முடியாது என்றாலும், இதற்கு ஒரு முக்கியக் காரணம் நம் நாட்டின் பொருளாதார நிலைமையும், கெட்டுப் போன வரதட்சணை பழக்கங்களும் தான்.
ஆனால் முன்னேறியதாகக் கருதப்படும் அமெரிக்காவில் கூட குழந்தையைப் பெற்றெடுத்து புறக்கணிக்கும் பழக்கம் இருக்கிறது. அதனால் மொத்தம் 47 மாநிலங்களில் குழந்தை பிறந்து 72 மணி நேரத்துக்குள் பெற்றோர் அதை புறக்கணிக்க விரும்பினால் அதற்கென கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் சட்டப்படி விட்டுச் செல்லலாம். வாழ்க்கைக்கு ஒரு பொருளே இல்லாமல், தோன்றியவாறெல்லாம் வாழ்ந்துவிட்டு, அடையாளச் சின்னங்களை அரசிடம் புறக்கணித்துச் செல்லும் பரிதாபம் உலகெங்கும் இருக்கிறது என்ற கசப்பான உண்மை இதில் தெளிவாகிறது.
குழு நண்பர்கள், இந்த கருத்தைப் பற்றியும், மற்றும் அடிக்கடி அனுப்பப்படும் மின் அஞ்சல்களைப் பற்றியும் கருத்துக்கள் அனுப்பப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். இந்த மின் அஞ்சல்களை, வலைப்பூக்களாக (blog) படிக்க விரும்பினால், http://vangathamizhan.blogspot.com என்ற இணையப் பக்கத்திற்கு வருகை தரலாம்.
மேலும், இந்த குழுவின் உறுப்பினர் கணக்கை அதிகரிக்க, உங்கள் நண்பர்களை (சீனாவில் வாழ்பவர்களோ, அடிக்கடி வருகை தருபவர்களோ, அல்லது சீனாவாழ் தமிழர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள விரும்பும் இந்தியா மற்றும் பல நாடுகளில் வாழும் தமிழர்களோ) எங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டுகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் நண்பரின் மின் அஞ்சல் முகவரியை (email address) எங்களுக்கு அனுப்பி வையுங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்வோம்.
அன்புடன்,
வங்கத்தமிழன்