மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
- திருவள்ளுவர்
பக்தனின் மனத்தில் வீற்றிருக்கும் இறைவனடியைப் பற்றி வாழ்பவர், இந்த உலகில் எல்லாம் பெற்று இன்புற்று வாழ்வார்
சற்றே மாற்றிச் சிந்தித்தால் இப்படியும் பொருள்படச் சொல்லியிருப்பாரோ என்றும் தோன்றுகிறது.
மனதைத் தான் வள்ளுவப் பெருந்தகை "மலர்" என்று உருவகப் படுத்தியிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. சரி, மனத்தைக் கட்டுப் படுத்தி சரியான வழியில் செலுத்தினால் நன்மையுண்டு என்பதை மகான்கள் சொன்னதோடில்லாமல், நம் தினசரி வாழ்க்கையில் நாம் காண்பதும் அது தானே. நல்ல சிந்தனைகளோடு இருந்தால் எல்லாம் நன்மையாக நடக்கிறது, ஒரு நாள் காலையில் ஏதாவது தவறாக நடக்க, அன்று முழுவதும் கெட்டுக் குட்டிச்சுவராகவும் போவதுண்டு தானே.
மாணடி - பொருள் விளக்கம் காண்போமா? "மாண்புமிகு அடி" அல்லது "கால்கள்", "திருவடி" என்றும் கொள்ளலாம். "தேரடி" என்ற சொல்லைப் பாருங்கள். தேர்ச் சக்கரம் என்றும் தேர்நிலை என்றும் பொருளுண்டு. தேர் நிற்குமிடம் அது. வீடியெங்கும் உலா வந்தாலும், தன் நிலைக்கு அது வருமிடம் தேர்நிலை.
தன் மனத்தைக் கட்டுக்குள் வைக்கும் அந்த மாண்பு மிக்க நிலையை அடைபவர்கள், இந்த உலகில் எல்லாம் பெற்று நீண்டகாலம் நன்மையுடன் வாழ்வார்கள் என்றும் பொருள் கொள்ளலாமே!
இது ஆத்திகம் பேசும் அடியவர்க்கும், நாத்திகம் பேசும் நல்லவர்க்கும் ஏற்புடையதாக இருக்கும் தானே?
அன்புடன்,
வங்கத்தமிழன் (ஜெயகாந்த் ராமமூர்த்தி)