நான் பணி புரிந்த நிறுவனத்தில், ஒரு சக தொழிலாளி ஒரு நாள் என்னிடம் வந்து, “சார், எங்கள் பிரிவின் அதிகாரியான உங்கள் நண்பர் சில காலமாகவே எனக்கு சம்பள உயர்வு கொடுக்காமல் ஏய்த்து வருகிறார். இன்று அவரிடம் சற்றே ஆவேசத்துடன் சென்று இது சம்பந்தமாக பேசத் தொடங்க, அவர் என்னிடம், “கிருஷ்ண பரமாத்மாவே சொல்லியிருக்கிறார் - கடமையைச் செய், பலனை எதிர்பாராதே - என்று, ஆகையால், சம்பள உயர்வெல்லாம் எதிர்பார்க்காதே, ஒழுங்காக வேலையைச் செய்” என்று சொல்லி அனுப்பிட்டார்” என்று புலம்பினார்.
இந்த விஷயம் வேடிக்கையாகத் தெரிந்தாலும், உண்மையிலேயே அந்த நண்பர் வேடிக்கையாகச் சொல்லியிருந்தாலும் விட்டு விடலாம். ஆனால் சொல்லப்பட்ட கருத்தை தன் சுய லாபத்திற்காக இப்படி மாற்றிக் கொள்பவர்களும் உண்டு. மனிதனாகப் பிறந்தவன் கடமைகள் பல, அந்த கடமைகளைச் சரிவர செய்ய அவனுக்கு செல்வமும் (பணமும்) ஒரு தேவை. அந்த பணத்தை ஈட்ட ஒரு கருவி தான் தொழில். ஆகையால் இப்படி ஏமார்ந்து விடாதீர்கள். சரி, உண்மையில் அந்த கடமை என்பது என்ன சார், என்று கேட்கிறீர்களா? அது வேற ஒண்ணுமில்லீங்க, நாம வாழ்க்கையில் சில விஷயங்கள் ஏன் எதற்கு என்று கேட்காமல் செய்ய வேண்டியுள்ளது. இவை தான் கடமை. விளக்கமா சொல்லணும்னா, கல்யாணம் பண்ணி, குழந்தை பெத்துக்கறது வாழ்க்கையின் ஒரு அம்சம். அந்த மனைவி, குழந்தையை பாதுகாக்க வேண்டியது ஒரு மனிதனின் கடமை. பிள்ளையப் பெத்து தெருவிலே விட்டுட்டா, அவன் கடமை தவறியவனாகிறான்.
“தேவர் மகன்” படத்தில், சிவாஜி கணேசன் அழகான ஒரு கருத்து சொல்றார், அது “இன்னைக்கு நான் மரம் வச்சாத்தேன், நாளைக்கு நீ பழம் சாப்பிட முடியும், அப்புறம் உன் மகன் சாப்பிடுவேன், அப்புறம் அவன் மகன் சாப்பிடுவேன், ஆனா வெதை நான் போட்டது, இதுல பெருமையில்ல அப்பு, இது கடமை” என்று. உண்மையாக கடமையாக உணர்ந்து, இன்று நான் சரியா பார்த்துக்கிட்டாத் தான், என் மகன் நாளை என்னை கவனிப்பான் என்ற எண்ணமின்றி, “அவன் என் மகன், அவனைப் பேண வேண்டியது என் கடமை” என்று எண்ணிப் பிரதி பலன் எதிர்பாராது செய்தால், நீங்கள் எதிர்பார்க்கவில்லை என்றாலும், உங்களைப் பலன் தானாக வந்தடையும்
வங்கத்தமிழன்
Friday, November 19, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment