Thursday, June 06, 2013

வேண்டுதல் வேண்டாமை

"வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல"
- திருவள்ளுவர்

கடவுள் வாழ்த்து என்பதால், கடவுள் ஏற்பு மற்றும் மறுப்புக் கொள்கைகளுக்கேற்றார் போல் கருத்துக்களைப் பதிக்கிறேன்.

விருப்பு வெறுப்பில்லாத உன்னத நிலையில் இருக்கும் அந்தக் கடவுளைச் சேர்பவனுக்கு, எந்த ஒரு இடுக்கண்ணும் வராது என்று நமக்கெல்லாம் சொல்லிக் கொடுத்த பொருள் கடவுள் ஏற்புக் கொள்கைக்குப் பொருந்தும்.

இன்னது வேண்டும், இன்னது வேண்டாமென்று சொல்லாது ஒரு மனிதனைப் பார்ப்பதரிது. தினசரி வாழ்க்கையில் பிரச்சினைகள் நிரம்பிக் கிடக்கக் காரணமும் இந்த நிலை தான். அப்படியிருக்க துறவிகளைத் தான் அத்தகைய நிலைக்குச் சொல்ல முடியும் என்றால், இன்றைய காலக் கட்டத்தில் அதைச் சொல்வதற்கும் அச்சமாக இருக்கிறது.

சரி வேண்டுதல் வேண்டாமை என்ற நிலை தான் என்ன? என்னத்த கண்ணையா சொல்வதைப் போல் "வேணும், ஆனா வேண்டாம்..." என்று தான் விளக்க முடியும். இருந்தால் மகிழ்ச்சியில் திளைக்காமல், இல்லாவிட்டால் வருத்தத்தில் வாடி விழாமல் தன்னிலை மாறாதிருப்பவன் "வேண்டுதல் வேண்டாமை இலான்". அப்படி ஒருவனைத் தேடி, அவனைப் போல் வாழக் கற்றுக் கொள்பவனுக்கு எந்த ஒரு துன்பமும் எப்போதும் வாராது. இது, கடவுள் மறுப்பவரும் ஏற்கக் கூடியக் கருத்து.

அன்புடன்,
வங்கத்தமிழன்

3 comments:

Sundar sir said...

"என்னத்த கன்னையா " என்று இருக்க வேண்டும்.பொருள் விளக்கம் இலக்கிய சுத்தம்.Good going.

Sundar sir said...

"என்னத்த கன்னையா " என்று இருக்க வேண்டும்.பொருள் விளக்கம் இலக்கிய சுத்தம்.well done.

Sundar sir said...

"என்னத்த கன்னையா " என்று இருக்க வேண்டும்.பொருள் விளக்கம் இலக்கிய சுத்தம்.well done