"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே, முன் தோன்றி மூத்த குடி, தமிழ்க்குடி" என்று படித்து, கேட்டு, சொல்லி என்ன பயன் இந்த ஆங்கில மோகம் தலை விரித்தாடும் போது?
ஆங்கிலேயன் ஒரு கால கட்டத்தில் உலகையே ஆண்டான். "பகலவன் என் நாட்டில் மறைவதே இல்லை" என்று கர்வத்துடன் சொல்லும் அளவுக்கு எங்கும் வியாபித்துத் தான் இருந்தான். அவனது மொழி அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தால் அவன் சென்ற இடமெங்கும் மக்கள் ஆங்கிலம் மட்டுமே தான் பேசிக்கொண்டிருக்க வேண்டும், ஆனால் உண்மை நிலை?
இந்தியத் துணைக்கண்டம் (இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், மியன்மார் உட்பட), ஆப்பிரிக்கக் கண்டம் எல்லாம் வெள்ளையன் கட்டுப்பாட்டில் இருந்தும் இந்நாடுகள் அனைத்திலும், ஏன் வட இந்தியா உட்பட ஆங்கிலம் பேசாமலே இவ்வளவு ஆண்டுகள் இருந்திருக்கிறார்கள். சரி, அப்படி என்னடா முன்னேற்றம் இவ்விடங்களில் பார்த்து விட்டாய் என்று என் மதிப்பிற்குறிய தமிழன் கேட்கலாம். ஆங்கிலேயக் கட்டுப்பாட்டிலிருந்த ஹாங்காங் நாட்டில் கூட பெரும்பான்மை ஆங்கிலம் பேசுவதோ, பெயர் பலகை வைப்பதோ இல்லையே, அவன் நம்மைவிட என்ன குறைந்து விட்டான்? ஆங்கிலேயக் கட்டுப்பாட்டில் இருந்திராத சீனன், ஆங்கிலமே இல்லாமல் நம்மை நித்தமும் அச்சப் படுத்துகிறானே, அவனைவிட நானும் நீயும் எந்த விதத்தில் நுனி நாக்கில் ஆங்கிலத்துடன் கிழித்து விட்டோம்?
பிரிட்டன், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க சதவிகிதம் (ஸ்பானிஷ் மொழியும் அங்கு பேசுகிறார்கள், அவர்கள் ஆங்கிலப் புலமை கொண்டவர்கள் இல்லை) தவிர வேறு எங்கு ஆங்கிலம் தினசரி வாழ்க்கையில் பேசுகிறார்கள்? அவர்கள் சாப்பிடவில்லையா, பொருட்கள் வாங்கி விற்று வாழ்க்கை நடத்தவில்லையா, அல்லது மற்ற நாடுகளுடன் வாணிபம் தான் செய்யவில்லையா? அன்றாடம் தெருவில் பிச்சையா எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்?
நான் சென்ற சில நாடுகளில் (இலங்கை, மலேசியா, தாய்லாந்து, சீனா, ஹாங்காங், வங்காளதேசம்) பெயர் பலகைகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் கண்டதில்லை. ஏன் நம் வட நாட்டிலேயே, பீகார், மேற்குவங்கம், ஒடிஷா போன்ற இடங்களில் ஆங்கிலப் பெயர்ப் பலகைகள் காட்டுங்கள் பார்ப்போம். சீனாவில் ஆங்கிலப் பெயர் பலகை (பெரும் வர்த்தக பலகைகள் தவிர - அவற்றிலும் சீன மொழி தான் முதன்மை பெற்றிருக்கும்) தேடுவது, வைக்கோல் போரில் நெல் மணி தேடுவதற்குச் சமம். ஆனால், தமிழ்நாட்டில் தமிழில் பெயர்ப் பலகை வைத்தால் நமக்குப் பிடிக்காது, "தமிழ்ப் புலவர் வந்துட்டாருடா" என்று கேலி செய்வோம். அதென்ன? "பேக்கரி" னு தமிழ்ல எழுதி வைக்கிறத விட்டு, "வெதுப்பகம்" னு புதுசா ஒண்ணு யாருக்கும் புரியாம எழுதியிருக்கான்னு ஒரு விமரிசனம். அழகிய தமிழ்ச் சொல் "அருவி" என்பதை மலையாளச் சகோதரன் பயன்படுத்த, "waterfalls" என்ற ஆங்கிலச் சொல்லை தமிழாக்கி "நீர்வீழ்ச்சி" என்றாவது சொல்லிக் கொண்டிருக்கிறாயே, அதையும் விட்டு "வாட்டர்ஃபால்ஸ்" என்றே சொல்ல வேண்டியது தானே என்று கேட்கிறான் தமிழன். புலம் பெயர்ந்து வாழும் தமிழன் தமிழை மறந்து விட்டான் எனச் சொல்லிக் கொண்டிருந்தது போக, அவன் அங்கே வாழ வைத்துக் கொண்டு தான் இருக்கிறான், இங்குள்ளவன் தான் "தன்மானத்தை" "Self Respect" ஆக மாற்றிக் கொண்டு, "ஐ காண்ட் ரீட் ஆர் ரைட் டமில்" என்று சொல்லிக் கொண்டு திரிகிறான்.
ஆங்கிலம் பேசினால் மட்டுமே தினம் 100 டாலரோ, பவுண்டோ உனக்குக் கொடுத்து விடுவானா மேலை நாட்டவன்? உன்னிடம் என்ன திறமை இருக்கிறதோ, அதைப் பார்த்து பயன்படுத்திக் கொள்ள மேற்கத்தியனும், அவன் திறமையைப் பயன்படுத்த நீயும் ஒருவரையொருவர் அணுகுகிறீர்களே தவிர வேறொரு காரணமுமில்லை. நான் மற்ற மொழிகள் கற்பதற்கும் பேசுவதற்கும் எதிரானவனல்லன், தாய்மொழியை இழிவு படுத்தி, ஏளனமாகச் சிரித்து ஆங்கிலம் தான் பெருமைக்குரியது என்ற நினைப்பைக் கண்டிப்பவன்.
ஏதோ தமிழ்ப் பெயர்ப் பலகையைப் பற்றிப் பேசியதால், "ஓ, நீ அந்தக் கட்சி ஆதரவாளனாடா?" என்று கேட்காதீர்கள்.
"நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்"
|
It is believed that the
"Thamizh" (known elsewhere as "Tamil") community
originated at a time when stones existed but sand did not. Going by the
scientific fact that stones disintegrated to become sand / soil particles,
stone existed earlier and the statement meant that Thamizh community existed
from time immemorial (Stone age perhaps). Ok, this is something everybody
says, but what do we practice?
The British held the World
under their umbrella and proudly said that "The Sun never set in the
British Empire", but if their language had made such a great impact,
English should be spoken fluently with a craze in most parts of the world,
but is that the reality? They held Srilanka, Pakistan, Bangladesh, Myanmar
and Africa and how much is English spoken on a day to day basis in these
countries?
Okay, you my dear Thamizh
brother / sister might ask "what have these countries achieved by not
speaking English, when the west is so affluent?" And my question to you
is, what have the Hong Kongese not achieved being the last country to
break away from the British (very recently) but still with most of their
population not speaking English? Isn't the West crazy about Hong Kong? How about
the Chinese who were not associated at all with the British, who do not speak
English and still are a threat to all of us? What did you my dear Thamizh
brother and me achieve by speaking English fluently?
English is not spoken
widely except in places like Britain, Australia, South Africa and a portion
of American population. Not all Spanish folks speak fluent English and they
work and deliver on par with English speakers. Have these people lost
opportunities for growth or are they not doing business with the rest of the
world? In countries I have traveled, (Srilanka, Malaysia, Thailand, China,
Hongkong, Bangladesh) I have seen most name boards of business establishments
in their language and not much in English and even in parts of North India,
you would find boards in Hindi / Bengali / Oriya etc. Searching for an
English sign board (except giant advertising hoardings) in China is like
searching for a grain of rice in a haystack.
But, my dear Thamizh
brother makes fun of Thamizh sign boards. Why can't one transliterate the
English name "Bakery" into Thamizh letters? Why should one find a
new Thamizh word for that and confuse me is his contention. When the word
"Waterfalls" has a Thamizh word "Aruvi" and our Malayalee
brothers and sisters use that, I have lost that word and am at least
translating "Waterfalls"verbatim into Thamizh, but my own Thamizh
brethren wants me to use "Waterfalls" instead and stop using
Thamizh altogether. When people here used to say that all those who have migrated to other countries stop using Thamizh language (which was a reality some time ago), they have started feeling the need to at least talk to their children at home in Thamizh, folks here are the ones that often say "I can't read or write Tamil". Isn't that a shame?
Is somebody from the western world likely to pay you a 100
dollars / pounds a day just to speak in fluent English? People come to you for what you
are capable of and not because you will sit them down for half an hour and
give them a sermon in impeccable English. Alright, now don't misunderstand me
as being against learning / speaking English or any other language. I am only
against disrespecting or ridculing usage of one's own mother tongue.
The drive in Tamilnadu to
change all name boards of business establishments to be primarily in Thamizh
might have been a political party's direction, so by this post am not
vouching for / supporting them or subscribing to their political views.
As a famous Thamizh saying
goes "I am not bound by anybody and I fear nobody"
|
Thursday, June 13, 2013
தமிழனுக்கு மட்டும் ஏன் இந்த ஆங்கில மோகம்? - Why this English craze my Thamizh brethren?
Thursday, June 06, 2013
வேண்டுதல் வேண்டாமை
"வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல"
- திருவள்ளுவர்
கடவுள் வாழ்த்து என்பதால், கடவுள் ஏற்பு மற்றும் மறுப்புக் கொள்கைகளுக்கேற்றார் போல் கருத்துக்களைப் பதிக்கிறேன்.
விருப்பு வெறுப்பில்லாத உன்னத நிலையில் இருக்கும் அந்தக் கடவுளைச் சேர்பவனுக்கு, எந்த ஒரு இடுக்கண்ணும் வராது என்று நமக்கெல்லாம் சொல்லிக் கொடுத்த பொருள் கடவுள் ஏற்புக் கொள்கைக்குப் பொருந்தும்.
இன்னது வேண்டும், இன்னது வேண்டாமென்று சொல்லாது ஒரு மனிதனைப் பார்ப்பதரிது. தினசரி வாழ்க்கையில் பிரச்சினைகள் நிரம்பிக் கிடக்கக் காரணமும் இந்த நிலை தான். அப்படியிருக்க துறவிகளைத் தான் அத்தகைய நிலைக்குச் சொல்ல முடியும் என்றால், இன்றைய காலக் கட்டத்தில் அதைச் சொல்வதற்கும் அச்சமாக இருக்கிறது.
சரி வேண்டுதல் வேண்டாமை என்ற நிலை தான் என்ன? என்னத்த கண்ணையா சொல்வதைப் போல் "வேணும், ஆனா வேண்டாம்..." என்று தான் விளக்க முடியும். இருந்தால் மகிழ்ச்சியில் திளைக்காமல், இல்லாவிட்டால் வருத்தத்தில் வாடி விழாமல் தன்னிலை மாறாதிருப்பவன் "வேண்டுதல் வேண்டாமை இலான்". அப்படி ஒருவனைத் தேடி, அவனைப் போல் வாழக் கற்றுக் கொள்பவனுக்கு எந்த ஒரு துன்பமும் எப்போதும் வாராது. இது, கடவுள் மறுப்பவரும் ஏற்கக் கூடியக் கருத்து.
அன்புடன்,
வங்கத்தமிழன்

Friday, May 10, 2013
மலர்மிசை ஏகினான்
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
- திருவள்ளுவர்
பக்தனின் மனத்தில் வீற்றிருக்கும் இறைவனடியைப் பற்றி வாழ்பவர், இந்த உலகில் எல்லாம் பெற்று இன்புற்று வாழ்வார்
சற்றே மாற்றிச் சிந்தித்தால் இப்படியும் பொருள்படச் சொல்லியிருப்பாரோ என்றும் தோன்றுகிறது.
மனதைத் தான் வள்ளுவப் பெருந்தகை "மலர்" என்று உருவகப் படுத்தியிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. சரி, மனத்தைக் கட்டுப் படுத்தி சரியான வழியில் செலுத்தினால் நன்மையுண்டு என்பதை மகான்கள் சொன்னதோடில்லாமல், நம் தினசரி வாழ்க்கையில் நாம் காண்பதும் அது தானே. நல்ல சிந்தனைகளோடு இருந்தால் எல்லாம் நன்மையாக நடக்கிறது, ஒரு நாள் காலையில் ஏதாவது தவறாக நடக்க, அன்று முழுவதும் கெட்டுக் குட்டிச்சுவராகவும் போவதுண்டு தானே.
மாணடி - பொருள் விளக்கம் காண்போமா? "மாண்புமிகு அடி" அல்லது "கால்கள்", "திருவடி" என்றும் கொள்ளலாம். "தேரடி" என்ற சொல்லைப் பாருங்கள். தேர்ச் சக்கரம் என்றும் தேர்நிலை என்றும் பொருளுண்டு. தேர் நிற்குமிடம் அது. வீடியெங்கும் உலா வந்தாலும், தன் நிலைக்கு அது வருமிடம் தேர்நிலை.
தன் மனத்தைக் கட்டுக்குள் வைக்கும் அந்த மாண்பு மிக்க நிலையை அடைபவர்கள், இந்த உலகில் எல்லாம் பெற்று நீண்டகாலம் நன்மையுடன் வாழ்வார்கள் என்றும் பொருள் கொள்ளலாமே!
இது ஆத்திகம் பேசும் அடியவர்க்கும், நாத்திகம் பேசும் நல்லவர்க்கும் ஏற்புடையதாக இருக்கும் தானே?
அன்புடன்,
வங்கத்தமிழன் (ஜெயகாந்த் ராமமூர்த்தி)

Thursday, April 25, 2013
வாலறிவன்
"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்"
- கடவுள் வாழ்த்து; திருக்குறள்
வள்ளுவத்தில் சொல்லப்பட்ட பொருட்படி, ஒருவன் என்ன கற்றாலும் என்றும் மாறா உயர்ந்த அறிவு நிலையான கடவுளை வணங்காவிட்டால் என்ன பயன் என்று கொள்ளலாம்.
"வால்" என்ற சொல்லுக்கு, இளமையான, வாலிபமான, களங்கமில்லா அல்லது தனக்கெனத் தனித் தன்மையில்லா / ஊடுருவக் கூடிய (transparent) என்றெல்லாம் பல பொருட்கள் எடுத்துக் கொள்ளலாம். அத்தகைய களங்கமில்லாத, அனைத்துமாகி இருக்கும் இறைவன் தான் எனக்குள்ளும், உனக்குள்ளும், எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கிறான் என்ற அறிவைப் பெறாமல் கற்ற கல்விக்கு என்ன பயன் என்று சற்றே ஊன்றி கவனித்துப் பொருள் கொள்ளலாமோ!

Wednesday, April 24, 2013
அகர முதல எழுத்தெல்லாம்!
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
- கடவுள் வாழ்த்து; திருக்குறள்
நேர்பட பொருள் கொண்டால் "எழுத்துக்களுக்கு எவ்வாறு 'அ' முதன்மையானதோ, அது போல இவ்வுலகிற்கு முதன்மையானவன் அந்த கடவுள் எனப் பொருள் கொள்ளலாம்.
சரி, சற்றே மாற்றிச் சிந்திப்போம்! எழுத்தரிவித்தவன் இறைவன் என்ற கருத்தைத் தான் வள்ளுவர் இப்படிச் சொல்லியிருப்பாரென்று தோன்றும் நமக்கு.
மொழிக்கு முதன்மையான ' அ'கரம் தொடங்கித் தமிழைக் கற்றுக் கொடுப்பவன் ஒரு மாணாக்கனின் உலகில் (வாழ்வில்) அந்த ஆதிக் கடவுளைப் போல் முக்கியத்துவம் பெறுவான் என்றும் பொருள் கொள்ளலாமே!
ஒரு நாடு முன்னேறத் தடையாக இருப்பது கல்வியறிவின்மை என்பது நிதர்சனமான உண்மை. படித்து முன்னேற வேண்டுமென்ற ஆர்வம் கொண்ட பல குழந்தைகள் படிக்க வழியின்றித் தவிக்க, அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தோ, அல்லது படிக்க வழிவகைகள் செய்தோ ஊக்குவிப்பவனும் 'எழுத்தறிவித்தவன்' தானே?
நம்மால் முடிந்தவரை நான்கு குழந்தைகளுக்கு படிக்க வசதிகள் செய்து கொடுக்கலாமே!

Tuesday, April 23, 2013
தமிழ் பதிப்புகள் - மீண்டும் தொடங்க உத்தேசம்
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,
நான் ஒரு நான்கு ஆண்டு காலம் கல்கத்தா நகரத்தில் அலுவல் காரணம் வாழ்ந்திருந்தேன். அப்போது தமிழில் எழுத வேண்டுமென்ற அவா மிகுதியில் சிங்கப்பூரிலிருக்கும் "ஐயா. மாகோ" அவர்கள் தொடங்கி நிர்வகித்துக் கொண்டிருக்கும் "உலகத் தமிழர் சங்கம்" (Global Tamils) குழுவில் சிறு துணுக்குகள் எழுதத் தொடங்கினேன். கல்கத்தா (வங்காளம்) விலிருந்து எழுதியதால் "வங்கத்தமிழன்" என்று அழைக்கலாமென மாகோ அவர்கள் சொல்ல, அதையே புனைப்பெயராக வைத்து வலைப்பூக்கள் (blog) பதித்து வந்தேன்.
பிறகு சீனா சென்று நான்கு ஆண்டு காலமும் கூட அவ்வப்போது எழுதிக் கொண்டிருந்தேன். சென்னை திரும்பிய பின் அது நின்று விட்டது. அதை மீண்டும் தொடங்க உத்தேசித்து இறங்குகிறேன், கூடியவரை விடாமல் எழுதுவேன் என்ற நம்பிக்கையுடன்.

Friday, April 19, 2013
ஐந்து ஆண்டுகளுக்குப் பின் மறந்து போன என் வலைப்பூ கணக்கை மீண்டும் தூசு தட்டியுள்ளேன்!
நேரமில்லை என்ற நொண்டிச் சாக்குடன் இத்தனை ஆண்டுகள் blog செய்யாததை நியாயப் படுத்தியதாக நினைத்துக் கொண்டு, மீண்டும் என் கருத்துக்களை இங்கே பதிக்கத் தொடங்கலாமென உத்தேசித்திருக்கிறேன்.
பார்ப்போம், நான் வெற்றி பெறுகிறேனா அல்லது எனக்குள் இருக்கும் அந்தச் சோம்பேரி மறுபடியும் தலை தூக்குகிறானா என்று.
அன்புடன்,
வங்கத்தமிழன் (ஜெயகாந்த் ராமமூர்த்தி)
பார்ப்போம், நான் வெற்றி பெறுகிறேனா அல்லது எனக்குள் இருக்கும் அந்தச் சோம்பேரி மறுபடியும் தலை தூக்குகிறானா என்று.
அன்புடன்,
வங்கத்தமிழன் (ஜெயகாந்த் ராமமூர்த்தி)
Subscribe to:
Comments (Atom)